நீர்கொழும்பு சம்பவம் தொடர்பில் கைதானவர்களுக்கு 24 வரை விளக்க மறியல்

Rihmy Hakeem
By -
0

எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள உணவகமொன்றின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் அறுவரை  எதிர்வரும்  24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,  நீர்கொழும்பு பிரதான நீதவான் ரஜீந்ரா ஜயசூரிய இன்று (11) உத்தரவிட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரொருவர் நீர்கொழும்பு பெரியமுல்லையில் வைத்து  நேற்று (10) கைதுசெய்யப்பட்டார். தாஜுன் அப்ஜான்  என்பவரே கைதுசெய்யப்படவராவார். அவர் நேற்று மன்றில் ஆஜர் செய்யப்பட்போது, அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
 இதனையடுத்து, , சட்டத்தரணிகள் ஊடான  ஏனைய ஆறு சந்தேக நபர்களும் நேற்று (10) சரணடைந்த நிலையில், கைதுசெய்யப்பட்டனர்.  இந்நிலையில், இவர்களை இன்று (11) மன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, சந்தேக நபர்களை  24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,  நீதவான் உத்தரவிட்டார். அன்றைய தினம், சரணடைந்த சந்தேக நபர்களை அடையாள வகுப்புக்கு  உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)