கணவர்மாரின் தாக்குதலுக்குள்ளான 25+ பெண்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்

Rihmy Hakeem
By -
0


ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 25 இற்கும் மேற்பட்ட வீட்டுப் பெண்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கணவர்மார்களின் தாக்குதல்களால் காயமடைந்து இவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தங்களது கணவர்மாருக்கு போதைப்பொருள் கிடைக்காத காரணத்தினால் வீட்டு வன்முறையில் ஈடுபட்டதாக அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட அனைவரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)