யாத்திரை முடிந்து இந்தியாவிலிருந்து வந்த 298 பேர் தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டனர்

Rihmy Hakeem
By -
0
இந்தியாவிற்கு யாத்திரை சென்ற 298 பேர் நேற்றிரவு இலங்கை வந்தடைந்துள்ளனர்.


இவர்கள் நேற்று இரவு 10.40 மணி அளவில் இந்தியாவின் டெல்லியில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 196 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதனையடுத்து அனைவரும் நேரடியாக இரணைமடு கொரோனா தடுப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வருகை தந்தவர்கள் இராணுவத்தினரின் ஊடாக விஷேட பேருந்துகளின் மூலம் இரணைமடு கொரோனா தடுப்பு முகாமிற்கு நேற்றிரவே அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

(அததெரண)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)