ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் போது களியாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது!

Rihmy Hakeem
By -
0

பொலிஸ் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் அதனை மீறி செயற்பட்ட 09 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை பகுதியில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
களியாட்ட நிகழ்வுகளில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஹப்புத்தளை பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் விற்பனை நிலையத்தை திறந்து வைத்திருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

(Tamil Mirror)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)