ஊரடங்கு நேரத்தில் ஊடகவியலாளர்கள், அரச அதிகாரிகள் தமது பதவிக்கான அடையாள அட்டைகளை பயன்படுத்த முடியம்

Rihmy Hakeem
By -
0
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நிலையில், ஊடகவியலாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊடக அடையாள அட்டை மற்றும் தமது பதவிக்கான அடையாள அட்டையை பயன்படுத்த முடியும்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில், இன்று மாலை 6 மணி தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊடக அடையாள அட்டை மற்றும் தமது பதவிக்கான அடையாள அட்டையை தமது கடமைகளுக்காக பயன்படுத்த முடியும் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவேவ தெரிவித்தார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)