மக்கள் தேசிய சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க எதிர்வரும் பொது தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று (16) கையொப்பமிட்டுள்ளார்.
பெலவத்த பகுதியில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி தலைமையகத்தில் வைத்து அவர் கையொப்பமிட்டுள்ளார்.
இதன்போது கட்சியின் மேலும் சில உறுப்பினர்களும் வேட்புமனுவில் கையொப்பமிட்டிருந்தனர்.
கட்சிகள் சின்னத்திற்கு போராடும் நேரத்தில் மக்கள் தேசிய சக்தி அனைத்து மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களிலும் கையொப்பமிட்டு விட்டதாக மக்கள் தேசிய சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொரோன வைரஸ் காரணமாக தற்போது அரசியல் பிரச்சார நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
(adaderana)