ஜனாதிபதிக்கு, பாராளுமன்றத்தை கலைக்க முடியும் - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

Rihmy Hakeem
By -
0
எட்டாவது பாராளுமன்றத்திற்கு இன்றுடன் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன.
இதற்கமைவாக 19 ஆவது அரசியல்யாப்புக்கு அமைவாக ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்திற்கு அமைய பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க இன்று தெரிவித்தார்.
இந்த வருடத்தில் நடத்தப்படவுள்ள தேர்தல்களுக்கு, 2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்பட்டியலே பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கான ஆரம்ப பணிகளை தேர்தல்கள் திணைக்களம் மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த முறை தேர்தலுக்காக 6 லட்சத்து தொடாக்கம் 7 லட்சம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கு அமைவாக ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்காளர்ளாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)