யார் கூட்டணி அமைத்தாலும் தேர்ந்தெடுப்பவர்கள் மக்கள்

Rihmy Hakeem
By -
0
அறிவார்ந்த பொதுமக்கள் தமது வாக்கினை பயன்படுத்தும் போது தமது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


தெரண 360 நிகழ்சியில் நேற்று (02) கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர், ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் கட்சித் தொண்டர்கள் மற்றும் மக்கள் ஆணைக்கு என்றும் அசாதாரணம் ஏற்படாது என தெரிவித்தார்.

யார் கூட்டணி அமைத்தாலும் இறுதியில் அவர்களை தேர்ந்தெடுப்பது பொதுமக்களே என அவர் தெரிவித்தார்.

இந்நாட்டிற்கு பலம் வாய்ந்த அரசாங்கம் ஒன்று தேவை என்பது இந்நாட்டு அறிவார்ந்த மக்கள் அறிந்த விடயம் என்றும், பொதுமக்கள் தமது வாக்கினை பாவிக்கும் போது தமது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை உணர்ந்து செயற்படுவார்கள் என நம்புவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

AdaDerana 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)