கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கு பொதுமக்கள் ஒன்று கூடுவதை குறைப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி சிறைச்சாலையின் கைதிகளை பார்வையிடுவதற்காக வருகைத் தருவோருக்கும் தற்போது தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வங்கி பரிவர்தனைகள், வணிகம் மற்றும் விற்பனை ஆகியவற்றை சாதாரணமாக மேற்கொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

