கொரோனா தொற்று - புதிதாக உறுதியானவர்களின் தகவல்கள்

Rihmy Hakeem
By -
0


கொரோனா வைரஸ் -  மேலும் மூவர் பாதிப்பு
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் புதிதாக அடையாளங் காணப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க உறுதி செய்துள்ளார்.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம். விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
பணிப்பாளர் (செய்தி)
செய்தி ஆசிரியர், 2020.03.13
ஊடக அறிக்கை
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் புதிதாக அடையாளங் காணப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க உறுதி செய்துள்ளார். இந்த நோயாளர்கள் தொடர்பான தகவல்கள் பின்வருமாறு
1. 41 வயதுடையவர். இவர் சமீபத்தில் ஜேர்மனுக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய ஆண் நபர் ஆவார். தற்பொழுது இவர் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
2. 37 வயதான ஆண். இத்தாலியில் இருந்து வந்த இவர் கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களுள் இடம்பெற்றுள்ளார். தற்பொழுது இவர் பொலன்நறுவை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
3. மற்ற நோயாளி 43 வயதான ஆண். இவர் இத்தாலியில் இருந்து வந்த பின்னர் கந்தகாடு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பப்பட்டவர். இவர் தற்பொழுது IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதற்கமைவாக இதுவரையில் நோய் தொற்றுக்குள்ளான முழு நோயாளர்களின் எண்ணிக்கை 5
நாலக கலுவேவ
அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)