பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சராக மேற்கொண்ட உத்தரவிற்கு அமைய, பெரிய வெங்காய விவசாயிகளுக்கு நியாயமான விலையொன்றை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் பெரிய வெங்காயத்திற்கான அரசாங்கத்தின் குறைந்தபட்ச உத்தரவாத விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கிராம் வெங்காயத்திற்கான குறைந்தபட்ச உத்தரவாத விலை 60 ரூபாவில் இருந்து 80 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
பெரிய வெங்காய விலை வீழ்ச்சி காரணமாக கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்காத காரணத்தால் பெரிய வெங்காய விவசாயிகள் குறித்த சாகுபடியிலிருந்து விலகும் போக்கு அதிகரித்து காணப்பட்டதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன் காரணமாக பெரிய வெங்காய அறுவடை வீழ்ச்சியடைந்த நிலையில் பெரிய வெங்காய கொள்வனவிற்கான அந்நிய செலாவணி அதிகரித்திருந்தது.
இந்த விடயங்களை கருத்திற்கொண்டு பெரிய வெங்காயத்திற்கான அரசாங்கத்தின் உத்தரவாத விலையினை அதிகரிக்க மற்றும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் நிதி அமைச்சர் என்ற வகையில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்தது.
அதேபோல், உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம் பெரிய வெங்காய சாகுபடியின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கில் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்திற்கான அதிகபட்ச சில்லறை விலை 199 ரூபாவாக நிர்ணயக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Adaderana.lk