ரவிக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் ; நாளை மறுதினம் பிடியாணை!

Rihmy Hakeem
By -
0
மத்திய வங்கியின் பிணை முறி மோசடி சம்பந்தமாக கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் உத்தரவிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 12 பேர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இவர்களை கைது செய்வதற்கான உத்தரவிடுவது சம்பந்தமான பிடி விராந்தை நாளை மறுதினம் பிறப்பிப்பதாகவும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிணை மோசடியுடன் தொடர்புடைய இவ்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இது தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் இன்று அறிக்கையிட்டதை அடுத்து நீதிமன்றம் வெளிநாடு செல்ல தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

(தமிழ் வின்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)