பெப்ரவரி 15ஆம் திகதி இத்தாலியில் முதன்முதலாக 3 வைரஸ் தொற்று உள்ளவர்கள் இனம் காணப்பட்டனர். அதன்பின் அடுத்தடுத்த நாட்களில் இனம் காணப்பட்ட அவர்களின் விபரம் கீழே தரப்படுகிறது.
15 - 03
16 - 03
17 - 03
18 - 03
19 - 03
20 - 04
21 - 21
22 - 79
23- 157
24- 229
25 - 323
26- 470
27- 655
28- 889
29- 1128
1- 1170
5 - 3858
10- 10149
15- 24747
இலங்கையில் முதலாவது வைரஸ் தொற்று உள்ளவர் மார்ச் மாதம் 10 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டிருக்கின்றார். அதன்பின் அடுத்தடுத்த நாட்களில் விபரம் கீழே தரப்படுகிறது
10 - 01
11 - 02
13 - 05
14 - 10
15 - 18
இத்தாலியில் ஆரம்ப ஐந்து நாட்களா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 03 என்பதாகவே இருந்து வந்திருக்கின்ற நிலையில் வைரஸ் தொற்று இனம் காணப்பட்டு 5 நாட்களில் இலங்கையில் 18 வைரஸ் தொற்று உள்ளவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அத்துடன் இலங்கையின் வைரஸ் தொற்று வீதம் நாளுக்கு நாள் இரண்டு மடங்குகளாக அதிகரித்துச் செல்வதை காணமுடிகின்றது.
இத்தாலியில் நோய் அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் ஆறாவது தினம் அதாவது 21 ஆம் திகதி குணம் அடைந்ததாக பதிவாகியிருக்கின்றது.
இலங்கையைப் பொறுத்தவரை மார்ச் 10 ஆம் திகதியின் பின் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியவர்ளில் குணமடைந்தவர்கள் யாரும் இதுவரையில் பதிவாகவில்லை.
அதேநேரம் இத்தாலியில் வைரஸ் தொற்று ஏற்பட்ட முதலாவது 3 பேர் அடையாளம் காணப்பட்டு ஆறாவது நாள் அதாவது பிப்ரவரி 21ஆம் தேதி முதலாவது மரணச் சம்பவம் பதிவாகியிருக்கின்றது. வைரஸ் தொற்று ஏற்பட்டதாக 21 பேர் அடையாளம் காணப்பட்ட போதே முதலாவது மரணம் ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையின் வைரஸ் தொற்று உள்ள முதலாவது நபர் கண்டுபிடிக்கப்பட்டு இன்றைக்கு ஆறு நாட்கள் கழிந்துவிட்டன.
இலங்கையில் இது போன்ற செய்தி பதிவாக கூடாது என்பதாக இறைவனை வேண்டிக்கொள்வோம்.
இலங்கையின் நோய் குறித்த புள்ளிவிபரங்கள் பயங்கரமான விதமாகவே காட்சியளிக்கின்றாது. இது மார்க்க ரீதியிலான விமர்சனங்களை முன்வைப்பது அவற்றுக்காக பதில் சொல்வது என்பதற்கான நேரம் அல்ல. அரசாங்கம் அவ்வப்போது விடுகின்ற அறிவித்தல்களுக்கு அமைய செயற்பட்டு இந்த கொடிய நோயின் தாக்கத்திலிருந்து நமது நாட்டை மீட்டெடுப்பதற்காக ஒத்துழைப்போமாக.
ராஃபி சரிப்தீன்.
2020.03.16

