பாத்திமா முபஸ்ஸிராவின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக மேலதிக நிதி உதவி கோரல்.

Rihmy Hakeem
By -
0


கஹட்டோவிட்டாவை சேர்ந்த பாத்திமா முபஸ்ஸிரா அவர்களின்  சிறுநீரக மாற்று சிகிச்சையை மேற்கொள்வதற்கு தேவையான நிதி திரட்டும் நோக்கில் அண்மையில் கஹட்டோவிட்ட வாழ் ஊர் பிரமுகர்களும் நலன்விரும்பிகளும் ஊர்மக்களும் இளைஞர்களும் ஒன்றிணைந்து கிடுகு விற்பனை ஒன்றிணை ஏற்பாடு செய்திருந்தமை யாவரும் அறிந்ததே.

இந்த கிடுகு விற்பனை மூலம் சுமார் பத்து இலட்சம் ரூபாவை திரட்டிக்கொள்ள முடிந்ததாக  கிடுகு விற்பனை ஏற்பாட்டு குழுவின் கணக்காளர் வாயிலாக அறியக்கிடைத்தது.

இது பற்றி இன்றைய தினம் குறித்த சகோதரியின் சகோதரரிடம் வினவியபோது குறித்த தொகை சேர்ந்துள்ளதை உறுதிப்படுத்தியதோடு இத்தொகையை மாத்திரம் கொண்டு சத்திர சிகிச்சையை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் சத்திர சிகிச்சையை வெற்றி கரமாக முடிக்க 24 இலட்சம் அளவில் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பாத்திமா முபஸ்ஸிரா அவர்களுக்கு தேவையான சிறுநீரகங்களில் ஒன்றை தனது தகப்பனார் மொஹம்மத் யுஸ்ரி அவர்கள் வழங்க முன்வந்துள்ளதால் அவருடைய சரீர சௌக்கிய நிலைமை சீராகும் வரைக்கும் அவரையும் பராமரிப்பு செய்ய வேண்டும் என்பதாகவும் அது வரை தனது தகப்பனால் தொழில் எதுவும் செய்ய முடியாது என்பதால் குடும்பத்தின் பொருளாதார வருமானத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்பதாகவும் கூறினார்.

ஒரு தகப்பனால் தனது மகளுக்கு செய்ய முடியுமான உயர்ந்த பட்ச உதவியாகிய தனது சிறுநீரகங்களில் ஒன்றை கொடுத்து தியாகம் பண்ண முன்வந்துள்ள இந்த நிலையில் மீதமுள்ள 14 இலட்சம் ரூபாவை திரட்டிக்கொடுப்பது சமூகத்தின் தலையாய கடமையாக காணப்படுகிறது.

எனவே அன்பார்ந்த சகோதரர்களே பொய்களை கூறி எத்தனையோ பேர் உதவிகள் கேட்டு வருகின்றனர் அவர்களுக்காக முன்பின் அறியாது நாமும் முடிந்த உதவிகளை செய்கிறோம்.ஆனால் இது ஊரறிந்த உண்மை தகப்பனால் முடிந்த உதவியை செய்ய முன்வந்துள்ள நிலையில் அவருடைய சக்திக்கு அப்பாற்பட்ட நிதித்தேவையை நிறைவு செய்து கொடுப்பதும் அந்த பிள்ளையின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு பண்ண தம்மால் முடியுமான மேலதிக நிதி உதவிகளை செய்ய வேண்டியதும் சமூகத்தின் கடமையாகும்.

ஆகவே இது வரை கிடுகுகள் எடுத்து உதவி இருந்தாலும் பணங்கள் வழங்கி இருந்தாலும் அல்லாஹ் நிச்சயமாக உங்கள் தர்மத்துக்கு நற்கூலி வழங்க போதுமானவன் அல்லாஹ்  உங்களின் தொழில்களில் சம்பாதிப்புக்களில் பரக்கத் செய்வானாகவும்.

ஆனாலும் சத்திர சிகிச்சையை மேற்கொள்ள தேவையான 14 இலட்சம் ரூபாவை வசூலிக்கும் பாரிய தேவையில் குடும்பத்தினர் காணப்படுகின்றனர்.முடியுமானால் ஊர்மக்கள் இதை திரட்டிக்கொள்ள ஜும்ஆ வசூல்களை ஏற்பாடு செய்ய முடியும் இன்னுமுள்ள தூரத்தில் வசிக்கும் நண்பர்கள் சகோதரர்கள் அவர்களின் கணக்கிலக்கத்துக்கு உங்கள் நிதியுதவியை வைப்பு செய்து உதவ முடியும் எது எப்படியான போதிலும் சமூகத்தின் மேல் சுமத்தப்பட்டுள்ள இந்த பொறுப்பை நிறைவேற்றுவது சமூகத்துக்குள்ள கடமையாகும் .

ஆகவே அல்லாஹ்வுக்காக உங்கள் உதவிகளை கீழ்வரும் கணக்கிலக்கத்துக்கு வைப்பு செய்து அல்லது வேறு வழிகளை கையாண்டு இப்பற்றாக்குறை நிதியை திரட்டிக்கொள்ள உதவி ஒத்தாசைகளை புரியுமாறு குடும்பத்தவர்கள் சார்பில் அன்பாய் வேண்டிக்கொள்கின்றோம்.

கஹட்டோவிட்ட வாழ் மக்கள் சார்பில் கஹட்டோவிட்ட நியூஸ் பேஜ் ஒபீஸியல்  குழுவினர்.

கணக்கிலக்கம்

S.L.M. Yusry
200850054523
Nations Trust Bank
Nittambuwa Branch

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)