பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணிகள் ஆரம்பம்

Rihmy Hakeem
By -
0


( மினுவாங்கொடை நிருபர் )

   பல்கலைக்கழக அனுமதிக்கான  விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணிகள்,  வியாழக்கிழமை  (05) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விண்ணப்பங்கள், மார்ச் 26 ஆம் திகதி வரை பொறுப்பேற்கப்படும். விண்ணப்பங்களை, ஓன்லைன் மூலமும் சமர்ப்பிக்க முடியும்.

   2019 / 2020 பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணிகளே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக,  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேம குமார தெரிவித்துள்ளார்.

   இதற்கான வழிகாட்டி நூற்களை,  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிலும், அங்கீகரிக்கப்பட்ட நூல் விற்பனை நிலையங்களிலும் மாணவர்களுக்கு தற்பொழுது  பெற்றுக்கொள்ள முடியும்.

( ஐ. ஏ. காதிர் கான் )

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)