கொடிய கொரோனாவே!.. (கவிதை) : லுதுபியா லுக்மான்
By -
மார்ச் 17, 2020
0
பல்லாயிரம் உயிர்களை
கொன்று வென்று வரும் கொரோனாவே !..-உன்
பெயர் கேட்டாலே
பதறிப் போகின்றது -எம்
நெஞ்சமே!..
சீனாவில் உருவெடுத்து
இட்டாலியில் உயிர்களை எடுத்து
ஸ்ரீலங்காவிற்குள் இலவசமாய் நுழைந்திட்ட
கொரோனாவே!..
யார் யாரோ செய்த தவறால்
எம் தாய் நாடும் அழுகின்றது!
அழைப்பில்லாமல் வந்த உன்னை அனுப்பிவைத்திட முடியாமல் தவிக்கின்றது!
கண்ணுக்குள் தெரியாத
வைரஸ்ஸாய் பிறப்பெடுத்து உலகம் முழுதும்
வைரலானாய்...
மண்ணிற்கு மேல் உள்ள எம்மை
ஒவ்வொரு நிமிடமும்
உன்னை எண்ணி நடு நடுங்க வைத்தாய்!..
நடுக்கடலிலே பயணிக்கும் கப்பலையும்
நிலை குலையவைத்தாய்!..
மரணத்தை நினைத்திட
மக்கள் மனங்களில்
அச்சத்தை விதைத்தாய்!...
அசுத்தத்தை தவிர்த்தாய்!...
படித்த மேதைகளையும்
கதிகலங்க வைத்தாய்!....
கொரோனா எனும்
கொடிய உயிர்
கொள்ளைக்காரனே!..-நீ
வென்று விடாமல் இருக்க
மன்றாடுகின்றோம்..
அழுதழுது தொழுவோம்!..
சுஜுதிலே விழுவோம்..
அனைவரும் ஒன்றாய்
எழுவோம்..
அண்ணிய தேசத்தின்
நுண்ணிய கிருமியை அழித்துவிட
அள்ளாஹ்விடமே முறையிடுவோம்!..
##யாரப்போ !
கொடிய நோயின்
பிடியில் இருந்து
எம் தேசத்து மக்களை
பாதுகாத்திடு றஹ்மானே!..##
🖋 லுதுபியா லுக்மான்🖋
Tags: