தேர்தல் காலப்பகுதியில் மத வழிபாட்டுத் தலங்களில் அரசியல் கூட்டங்களை நடத்;துவது மற்றும் வேடபாளர்களை ஊக்குவித்தல் தேர்தல் விதி முறைகளுக்க முரண்பாடானது.
இருப்பினும் கடந்த காலங்களில் இவை இடம்பெற்றதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மல்வத்து, அஸ்கிரி பீடங்களின் மஹாநாயக்கர்களை இன்று சந்தித்ததன் பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் இவ்வாறு தெரிவித்த அவர்,. தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் வழிப்பாட்டுத் தலங்களில் பிரசாரங்களை மேற்கொள்வதாக முன்வைக்கப்படுமாயின், உரிய நபரின் பாராளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்யும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு இருப்பதாகவும் கூறினார்.

இதுதொடர்பான தேர்தல் சட்டத்தின் 79 ஆவது சரத்தின் பிரதியொன்றையும் மல்வத்து, அஸ்கிரி பீடங்களின் மஹாநாயக்கர்களிடம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதன் போது வழங்கினார்.
இதுபற்றி மறைமாவட்ட ஆயர்களுக்கும் இந்து, இஸ்லாமிய சமயத் தலைவர்களுக்கும் விளக்கம் அளிக்கப்படவுள்ளது. ஆனால், மதத் தலைவர்களுக்கு அரசியலில் ஈடுபட முடியும் என்றும் அவர் கூறினார். தேர்தல் காலங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அரசியலுக்காக பயன்படுத்துவது முரண்பாடானது என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)