மைனியே இவ்வரிகள் உனக்கானவை... !!
By -
மார்ச் 08, 2020
0
மெல்லமாய் தென்றல் என்னை வருடிச்செல்ல, ஏதோ பழைய நினைவுகள் என்னில் எட்டிப்பார்த்தன.
தலை சீவிய கையோடு கொஞ்சம் முன்னமே நடந்தேன். "ஆற்றுக்குப்போக வரல்லியா?" குளிர் காற்று 'சில்' இல்லை 'ஜில்' லென்று வீசிய தருணமது. தூரத்து உறவு மைத்துனனின் மனைவி அவர். "ஆ... நில்லுங்க வாறென்; என வீட்டினுள் நுழைந்தேன். முந்தைய நாள் சமையலுக்கு உதவிய சட்டி பானைகளுடன் மல்லுக்கட்டும் மைனியிடம் போய், " ஆற்றுக்குப்போவோமா..?" என விழிகளை உயர்த்தி உதட்டைக் குவித்துக் கேட்டேன். "ஹா.. இதெல்லாம் முடிச்சிட்டே போவோம்" என்று மலர்ந்த முகத்துடன் வேலைகளை துரிதப்படுத்தினோம். ஆற்றின் குளியல் கேட்கவா வேண்டும்...!!
இது மட்டுமல்ல.... பாங்கோசை கேட்டவுடன் இறைவனுக்காய் ஒன்றாக சேர்ந்து தொழுத கணங்கள், ஸுஜூதில் நெற்றி பதித்து அழுது கேட்ட து ஆக்கள், குர்ஆன் திலாவத்துக்கள், மார்க்க வகுப்புக்கள், வாசிப்பில் நேசம் தந்த அகரம்,அல்ஹஸனாத், மீள்பார்வை, தருணி சேர்ந்து சென்ற ஒற்றையடிப்பாதைகள், கைகளில் இட்ட மருதானி , மறக்க முடியாத Nature's secrets program இது போன்ற அழகிய நினைவலைகள் மனதில் அலை மோதுகின்றன.
திரும்பவும் அது போன்றதொரு காலம்..... திரும்பாது...
I Miss You Mainy
Fayasa Fasil
Tags:

