அரசாங்கம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக் கொடுத்த வாக்குறுதிகள் புஸ்வானமாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கிரிந்திவெல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அமைச்சரவை பேச்சாளர் 1000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதியை 500 ரூபாய்க்கு கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவதாக கூறுகிறார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுமார் 69 இலட்சம் பேர் புதிய மாற்றத்தை எதிர்ப்பார்த்து எமது பிரதிவாதியை வெற்றிப் பெறச் செய்தனர்.
இன்று அமைச்சரவை பேச்சாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது 1000 ரூபாய் பெறுமதியான பொதியை 500 ரூபாய்க்கு பெற்றுக் கொள்ள முடியும் என்று.
எனினும், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 3000 ரூபாய் பெறுமதியான பொதி ஒன்றை இலவசமாக பெற்றுத் தருவதாக தெரிவித்திருந்தனர்.
100 நாட்கள் செல்ல வில்லை. மூன்றாயிரத்தை குறைத்தனர். 1000 ரூபாய் பொதியை 500 ரூபாய் ஆக்கியுள்ளனர். இதில் இருந்தே அவர்களின் பொய், மோசடி தொடர்பில் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன் என்றார்.
(Adaderana)

