அனைத்து கல்வி மற்றும் ஏனைய சுற்றுலா பயணங்கள் மீள் அறிவிக்கப்படும் வரை இடைநிறுத்தம்
கொரோனா வைரஸ் நோயினால் இலங்கையர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை சிறுவர்களை பாதுகாப்பதற்காக கல்வி,விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களின் ஆலோசனையின் பேரில் விசேட வேலைத்திட்டமொன்று அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நபர் இலங்கையின் பல பாகங்களுக்கும் பயணித்துள்ளமையினால் கல்வி மற்றும் ஏனைய சுற்றுலா பயணங்களை இடைநிறுத்துமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
சிறுவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.
அத்துடன் சமூக வலையத்தளங்களில் பரவும் வதந்தி நம்பி ஏமாறாமல் மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த கண்ணும் கருத்துமாக செயற்படுமாறு வேண்டுகின்றோம்.
ஊடகப்பிரிவு
கல்வி அமைச்சு

