பயணிகள் விமானங்கள், கப்பல் வருவது தடை!

Rihmy Hakeem
By -
0

அனைத்து பயணிகள் விமானம் மற்றும் கப்பல்கள் இலங்கைக்கு வருவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முடிவடையும் வரையில் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வணிக கப்பல்களில் இருந்து கடல் பாதுகாப்பு அதிகாரிகளினால் கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவாமல் இருப்பதற்காக கடற்படையினர் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த கப்பல்களின் உள்நாட்டு பிரதிநிதிகள் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள முறைமைக்கு அமைய கடற்படையினரின் முழு கண்காணிப்பின் கீழ் இது இடம்பெறவுள்ளது.

Adaderana

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)