பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் பணி எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் பொறுப்பேற்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதி எந்த வகையிலும் நீடிக்கப்படமாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

