"அல்லாஹ்வை நாம் தொழுதால்" உள்ளிட்ட கீதங்களை இயற்றிய கவிஞர் நாகூர் சாதிக் காலமானார்!

Rihmy Hakeem
By -
0

இசைமுரசு நாகூர் ஹனிபா  பாடிய ’பாத்திமா வாழ்ந்த முறை உனக்குத் தெரியுமா?’ ’சொன்னால் முடிந்திடுமோ?’,’தக்குபீர் முழக்கம்’,’அல்லாஹ்வை நாம் தொழுதால்’, ’இருலோகம் போற்றும் இறைத்தூதராம்’ உள்ளிட்ட பிரபலமான பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் நாகூர் சாதிக். இவர் மேலும் பல பாடகர்களுக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

இஸ்லாமிய மக்களால் பெரிதும் பாராட்டப்பட்ட நாகூர் சாதிக் செவ்வாய்க்கிழமை (17/03/2020) இரவு முதுமை காரணமாக மரணமடைந்தார். அவரது நல்லடக்கம். இன்று (18/03/2020) காலை நாகூர் தர்கா ஷரிப் மைய வாடியில் நடைபெற இருக்கிறது. உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கவிஞர் சாதிக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

(Nakkeeran)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)