கொரோனா வைரஸ் நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
சுகாதார அதிகாரிகளினால், அறிவுறுத்தப்பட்டவர்கள் கண்காணிப்பு நிலையங்களுக்கு செல்லாத பட்சத்தில், அல்லது கண்காணிப்பு நிலையங்களில் இருந்து தப்பிச் செல்லுதல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும் என பொலிஸ் தலைமையகம் எச்சரித்துள்ளது.
இதற்கமைய, இவ்வாறு செயற்படுகின்ற நபர்களுக்கு, நோய்த் தடுப்பு கட்டளை சட்டத்தின் பிரகாரமும், தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரமும், பிடியாணை இன்றி கைது செய்து, இரண்டு வருடங்களுக்கு தடுத்து வைக்க பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற விசேட தெளிவுபடுத்தல் ஊடக சந்திப்பின் போது, பிரதிப் பொலிஸ்மா அதிபர்
அஜித் ரோஹண இதனைக் குறிப்பிட்டார்.
அஜித் ரோஹண இதனைக் குறிப்பிட்டார்.

