வாகன அனுமதிப்பத்திரம் வழங்கல் இடைநிறுத்தம்!

Rihmy Hakeem
By -
0
வாகன வருமான அனுமதிப்பத்திரம் பிரதேச செயலகங்கள் மூலம் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.


இது மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும். இருப்பினும் இணையத்தளத்தின் ஊடாக இந்த அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு முடியும் என்று அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள காலப்பகுதிக்கு கொடுப்பனவு அல்லது தண்டப்பணம் அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 வரையிலான காலப்பகுதியில் சம்பந்தப்பட்ட வருமான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதில் காலதாமதத்தை எதிர்கொள்ளும் நபர்களுக்கு வீதி பரிசோதனையின் போது நிவாரணம் வழங்குமாறு பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)