Inter News நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தல் செய்தி அறிக்கையிடல் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

Rihmy Hakeem
By -
0

(அப்ரா அன்ஸார்)

Internews Sri Lanka அமைப்பு 2020 பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு ஊடகவியலாளர்களுக்கான தேர்தல் அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வொன்றை  வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை (மார்ச் 13 &14) கொழும்பு 05ல் அமைந்துள்ள ஹோட்டல் ஜானகியில் ஏற்பாடு செய்திருந்தது.

பாராளுமன்றத் தேர்தலின் நடைமுறை அம்சங்கள் மற்றும் அவற்றை திறம்பட அறிக்கை செய்வதற்கான உத்திகளை உள்ளடக்கியதாக இந் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.எம்  மொஹமட் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான லஸந்த, ஜயசிறி உள்ளிட்ட பலர் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

மேலும் பல ஊடக நிறுவனங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.










கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)