இவ்வருடமும் கொடையாளர்களிடமிருந்து ஸதகாகளுக்கான உதவிகளை எதிர்பார்க்கும் ZAITHOON NHAR FOUNDATION

Rihmy Hakeem
By -
0
புனித ரமாழானை முன்னிட்டு, கடந்த பல வருடங்களாக ZAITHOON NHAR FOUNDATION நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேவையுடையோருக்கான உணவுப் பொதிகள் மற்றும் இப்தார் நிகழ்வுகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இவ்வருடமும் உணவுப் பொதிகளும், இப்தார் நிகழ்வுகளும் நடாத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த வருடங்களில் போன்று  இவ்வருடமும்  ZAITHOON NHAR FOUNDATION ஊடாக தேவையுடைய மிகப் பொறுத்தமானவர்களை கண்டறிந்து இவ்வுதவிகளை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து அவர்கள் செய்து வருகிறார்கள். எனவே உங்கள் ஸதகாக்கள், ஹதியாக்களையும் இவ்வமைப்பினூடாக மிகப் பொறுத்தமான ஏழைகளுக்கு வழங்க முன்வருவீர்கள் எனும் நம்பிக்கையில் இவ்வேண்டுகோளை அவர்கள்  விடுக்கிறார்கள்.

உணவுப் பொதி ஒன்றுக்காக ரூபாய் 3000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேருபகாரிகள், மற்றும் கொடையாளர்கள் வழமை போன்று தொடர்பு கொள்ளுமாறு மிக்க அன்பாய் வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

தகவல் :
ஸைத்தூன் நஹார்
ZAITHOON NHAR FOUNDATION
கனடா.







கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)