கஹட்டோவிட்ட அல் ஹிமா நிறுவனம் மூலம் வதுபிட்டிவலை ஆதார வைத்தியசாலைக்கு சமையல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

Rihmy Hakeem
By -
0

கம்பஹா மாவட்டத்திலுள்ள வதுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் 24 மணித்தியாலங்களும் பணிபுரியும் வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் தமது உணவுத் தேவைகளை அருகிலுள்ள கடைகளின் மூலமே பூர்த்தி செய்து வந்தனர். எனினும் தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதால் வைத்தியசாலை ஊழியர்கள் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.

இந்நிலையில் கஹட்டோவிட்ட அல் ஹிமா பவுன்டேசன் நிறுவனம் சார்பில் அதன் தலைவர் அல்ஹாஜ் அஷ்ஷெய்க் நூருல்லாஹ் (நளீமி) அவர்கள் கேஸ் குக்கர், 2 ரைஸ் குக்கர், சிலிண்டர் உள்ளிட்ட பல பொருட்களை வைத்திய அதிகாரி தம்மிக்க உள்ளிட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம்
நேற்றைய தினம் (03) வழங்கி வைத்தார். 

இந்த சந்தர்ப்பத்தில் அல் ஹிமா நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் நூருல்லாஹ் (நளீமி) அவர்களுடன், அல்ஹாஜ் சில்மி (வதுபிட்டிவல ஆதார வைத்தியசாலை), அல்ஹாஜ் பிர்தவ்ஸ், அல்ஹாஜ் முஸ்தாக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.










கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)