மையித்தினை அடக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி?

Rihmy Hakeem
By -
0


கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் வபாத்தான மருதானை சகோதரரின் ஜனாஸாவை அடக்குவதற்கு அனுமதியைப் பெறுவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீவிர முயற்சிகள் பலனற்றுப் போயுள்ளன.

இது தொடர்பில் சமூக முக்கியஸ்தர்கள் குழு இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டு முயற்சித்திருந்தனர். எனினும் JMO அனுமதி மறுத்துள்ள நிலையில் முயற்சிகள் பலனற்றுப் போயுள்ளன.
இந்நிலையில், ஜனாஸாவை கொடிகாவத்தை கொண்டு சென்று எரியூட்டுவதற்கான ஆயத்தம் இடம்பெறுகிறது.

73 வயதான, உயிரிழந்த சகோதரரின் ஜனாசாவை அடக்குவதற்கு ஜாவத்தையில் தயார் நிலையிலேயே இருந்த போதிலும், அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் முயற்சிகள் பலனற்றுப் போயுள்ளன. இறந்தவரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!

நன்றி - Sonakar.com

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)