ஏ. அகீல் சிஹாப்
மழையால் போட்டி பாதிக்கப்படும்போது கையாளப்படும் டக்வொர்த் லூவிஸ் விதியை உருவாக்கியவர்களில் ஒருவரான டோனி லீவிஸ் தனது 78 வயதில் காலமானார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டி20 கிரிக்கெட் போட்டிகள் காரணமாக மழையால் பாதிக்கப்பட்டால் 'ரிசர்வ் டே' என அழைக்கப்படும் அடுத்த நாள் போட்டி தொடர்ந்து நடைபெறும். இதனால் நேரம் வீணாகுவதோடு இரசிகர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
இதை கருத்தில் கொண்டு டோனி லூவிஸ் - பிராங்க் டக்வொர்த்து ஆகியோர் ஒன்றிணைந்து குறித்த டக்வொர்த் லூவிஸ் விதிமுறைய உருவாக்கினர்.
இந்த விதிமுறையை ஐ.சி.சி ஏற்றுக்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் நடைமுறைப்படுத்தியது. இருவரின் பெயரையும் சேர்த்து டக்வொர்த் லூவிஸ் என அதற்கு பெயரிடப்பட்டது.
அதை உருவாக்கியவர்களில் ஒருவரான டோனி லூவிஸ் 78 வயதில் காலமாகியுள்ளார். 1997-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த விதிமுறை 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

