ஊரடங்கு உத்தரவை மீறிய 56,326 பேர் கைது

Rihmy Hakeem
By -
0

ஊரடங்குச் உத்தரவை மீறிய 56326 பேர் இதுவரையில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 20 முதல் தற்போது வரையிலான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய 620 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 274 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 15,490 வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)