ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சட்டத்தரணி நியாஸின் மனு

Rihmy Hakeem
By -
0

கொரோனா தாக்கத்தினல் பாதிக்கப்பட்டு மரணிக்கின்ற  முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிராக சட்டத்தரணி நியாஸ் முஹம்மது அவர்களினால்  உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று அடிப்படை உரிமை மீறல் வழக்குகளில் இரண்டு வழக்குகள் நேற்றைய தினம் (19.05.2020) முதன்முறையாக விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு மீண்டும் எதிர்வரும்   08.06.2020 ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டன.

இதில் பிரபல சட்டத்தரணிகளான சப்ரி நிலாம்தீன், சட்டத்தரணி என்.எம்.ஸைத், சட்டத்தரணி எஸ். ரஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி நியாஸ் முஹம்மது ஆகியோர் மனுதாரர்கள் சார்பாக உச்சநீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)