மேலும் 20,000 பேரை நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கவுள்ளோம் - பிரசன்ன ரணதுங்க

Rihmy Hakeem
By -
0

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை திருப்பி அழைத்து வரும் திட்டத்தை இடைநடுவில் நிறுத்தப் போவதில்லையென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வேலை செய்வதற்காக சென்று 21 நாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் பத்தாயிரம் பேர் வரை நாடு திரும்பி இருக்கிறார்கள். இவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். உடுகம்பலவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில்  அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் கொவிட்-19 காரணமாக நிர்க்கதியான இலங்கையர்கள் அனைவரையும் தாய்நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் எதிர்பார்க்கிறது. மேலும் 20 ஆயிரம் பேர் வரை நாடு திரும்ப ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஒரு சீரான வழிமுறையின் கீழ் இவர்களை திருப்பி அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)