பாகிஸ்தான் பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்

www.paewai.com
By -
0

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச்சந்தை அலுவலகம் வழக்கம்போல் இன்று (29) பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது ஆயுதங்களுடன் அங்கு பயங்கரவாதிகள், பிரதான நுழைவாயிலில் குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்டபடி உள்ளே நுழைந்தனர்.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரும் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் சுட்டதில், பொதுமக்கள் தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். 

ஒரு பயங்கரவாதி பங்குச்சந்தை அலுவலக கட்டிடத்திற்குள் நுழைந்து பதுங்கிக் கொண்டான். இதையடுத்து அலுவலக பணியாளர்கள் அனைவரையும் பொலிசார் வெளியேற்றினர். பின்னர் அப்பகுதி முழுவதையும் பொலிசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, பயங்கரவாதி சுற்றி வளைக்கப்பட்டான்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)