சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடாத்துவதற்கான சூழலை ஏற்படுத்தி தருவேன் - ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி

Rihmy Hakeem
By -

சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான சூழலை ஏற்படுத்தி தருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற (17) கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடல் இதுவாகும்.