உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சாட்சியமளிக்க CTJ அப்துல் ராசிக் இற்கு அழைப்பு

Rihmy Hakeem
By -

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்க ஆஜராகுமாறு சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் (CTJ) பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்களுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் 21ம் திகதி பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிம் தலைமையில் இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்ந்தும் பல சாட்சியங்களை விசாரணைக்கு உட்படுத்தி வரும் நிலையில் எதிர்வரும் 24ம் திகதி புதன் கிழமை சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் (CTJ) பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் அவர்களை  ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளது.