MCC ஒப்பந்தம் தொடர்பான இறுதி அறிக்கை பிரதமரிடம்

www.paewai.com
By -
0

MCC மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் இன்று மாலை ஒப்படைக்கப்பட்டது.

உடன்படிக்கை தொடர்பில் 6 மாத காலம் ஆராயப்பட்டது.

பல்வேறு துறைகளின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளைக் கருத்திற்கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை நாளைய தினம் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை எதிர்காலத்தில் பிரதமரினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் பிரதமர் இந்த குழுவை நியமித்ததுடன், பேராசிரியர் லலிதசிறி குணருவன் குழுவின் தலைவராக செயற்படுகின்றார்.



கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)