ஈழத்து தமிழ் இலக்கியத் துறையில் தனக்கென தனியிடத்தைப் பதிவு செய்த பத்மா சோமகாந்தன் தமது 86ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார்.
அன்னாரின் பூதவுடல் பொரளையிலுள்ள தனியார் மலர்ச்சாலையொன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் காலை 10 மணிக்கு பொரளையில் இடம்பெறவுள்ளதாக அன்னாரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.