அரசாங்க பாடசாலைகளுக்கான 2ம் தவணை விடுமுறை (விபரம்)

Rihmy Hakeem
By -
0

அரசாங்க பாடசாலைகளுக்கான 2 ஆம் தவணை விடுமுறை ஒக்டோபர் 9 ஆம் திகதி முதல் நவம்பர் 16 ஆம் திகதி வரை எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைகள் நடைபெறும் புதிய திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரையிலும், 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் 11, 12 மற்றும் 13 ஆம் தர மாணவர்களுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)