ஹஸ்பர் ஏ ஹலீம்
சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளை பரிக்க விடக்கூடாது உரிமைகளோடும் தன்மானத்தோடும் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் இதற்காக நமக்காக ஓங்கி ஒலிக்கக் கூடிய குரல்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என முன்னால் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.
கிண்ணியா அண்ணல் நகர் பகுதியில் இன்று (27)இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு பேசுகையில்
நமது சமூகம் அச்சுறுத்தப்படுகிறது இதனால் தெற்கில் வாக்குகளை பெற முடியாது கடந்த ஜனாதிபதி தேர்தலில் மூதூர் தொகுதி மக்கள் தெளிவாக வாக்களித்து ஒன்று பட்டுள்ளார்கள் .
சந்திரிகா அம்மையார் 63 வீதமான அதிகூடிய வாக்குகளை ஜனாதிபதி தேர்தலில் பெற்றுள்ளார் விகிதாசார முறையில் 225 உறுப்பினர்களில் 101 ஆசனங்களை கொண்டது தற்போதைய ஜனாதிபதி பெற்ற 52 வீதமான வாக்கு வீதமே உள்ளது.
இப்படியாக இருக்க 19 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கியவர்கள் அதனை இல்லாமல் ஆக்க வேண்டும் என சிலர் மஹிந்த அணியில் நின்று கொண்டு முயற்சிக்கிறார்கள் சிறுபான்மை சமூகத்தின் உரிமை பாதுகாப்பு தொடர்பில் பேசப்பட்ட திருத்தமே இதுவாகும் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கம் ஏழுக்கும் மேற்பட்ட ஆணைக் குழுக்கள் இதன் போது சுதந்திரமாக செயற்படுவதற்காக உருவாக்கப்பட்டது.
மற்றவர்களின் தலையீடு இருக்க முடியாது என்றிருந்த போதும் தேர்தல் ஆணைக் குழுவில் அங்கம் வகிக்கும் ரட்ண ஜீவன்ஹூல் அவர்களை மரண தண்டனை வழங்குவது போன்று தூற்றுகிறார்கள் இவ்வாறு இருக்க தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ சமூக வாக்குகளால் எவ்வாறு பெரும்பான்மை ஆசனத்தை பெற முடியும் .
விகிதாசார முறை மூலமாக திருகோணமலையில் மூன்று உறுப்பினர்களும் ஒன்று போனஸ் ஆசனமாகும் கொழும்பில் 19 உறுப்பினர்கள் ஒன்று போனஸ் ஆகும் இப்படியாக விகிதாசார முறை சிறுபான்மை சமூகத்துக்கு தங்களது பிரதிநிதிகளை பெற்றுக் கொள்வதில் சாதகமாகவுள்ளது .
எம்மை அச்சுறுத்தியும் வாக்குகளை சிதறடிக்கவும் சில கோடாரி காம்புகளை தேர்தலில் களமிறக்கியுள்ளார்கள் வாக்குகளை சூறையாடவும் இந்த இழி செயல்களல் அரங்கேற்றப்படுகிறது தேவையற்ற இரானுவ முகாம்களால் மக்களை பீதியில் அமர்த்தச் செய்தும் கிண்ணியா சூரங்கல்,உப்பாறு,யான் ஓயா போன்ற இடங்களில் முகாம்கள் தேவையற்றது .
கடந்த தேர்தலின் போது மூதூர் தொகுதியில் 91 வீதமான வாக்குகளை சஜீத்துக்கும் 4900 வாக்குகளையே கோத்தாவுக்கும் அளித்து தெளிவாக செயற்பட்டார்கள் .
ஓகஸ்ட் நடை பெறவுள்ள தேர்தலில் சரியான முடிவுகளை எடுத்து நமது பலம் மிக்க வாக்குகளை கொண்டு உரிமையோடு நாடாளுமன்றத்தில் குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்வதனால் முஸ்லிம் சமூக தலைமைகள் றிசாட் போன்றவர்களின் குரல்களும் பாதுகாக்கப்படும் சம்மந்தமில்லாமல் ஏப்ரல் 21 தாக்குதலோடு ஒரு நாள் தோன்றி ஒரு நாள் மறைந்த தற்கொலை குண்டுதாரி சஹ்ரானோடு அவரது குடும்பத்தை அவரை தொடர்புபடுத்தி அப்பட்டமான குற்றங்களை சுமத்தியுள்ளார்கள்.
ஓகஸ்ட் நடை பெறவுள்ள தேர்தலில் சரியான முடிவுகளை எடுத்து நமது பலம் மிக்க வாக்குகளை கொண்டு உரிமையோடு நாடாளுமன்றத்தில் குரல்களை ஓங்கி ஒலிக்கச் செய்வதனால் முஸ்லிம் சமூக தலைமைகள் றிசாட் போன்றவர்களின் குரல்களும் பாதுகாக்கப்படும் சம்மந்தமில்லாமல் ஏப்ரல் 21 தாக்குதலோடு ஒரு நாள் தோன்றி ஒரு நாள் மறைந்த தற்கொலை குண்டுதாரி சஹ்ரானோடு அவரது குடும்பத்தை அவரை தொடர்புபடுத்தி அப்பட்டமான குற்றங்களை சுமத்தியுள்ளார்கள்.
இதனை ஜனாதிபதிஆணைக்குழு பாராளுமன்ற சபாநாயகர் கரு இரானுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க உள்ளிட்ட பல தீர்ப்புக்கள் குற்றமற்றவர் என நிரூபித்தும் கூட மீண்டும் பழி தீர்க்க செயற்படுகிறார்கள். முஸ்லிம் சிங்கள சகோதரர்கள் இடையில் இனக் கலவரத்தை உருவாக்க நினைக்கிறார்கள்.
கொரோனா நோயை முஸ்லிம்கள் தான் பரப்பியதாகவும் குற்றம் சுமத்துகிறார்கள் ஜனாசாக்களை எரித்தார்கள் இப்படி பல மன வேதனைகளை எம் மீது திணித்தார்கள் சமூகத்தை அசிங்கப்படுத்தும் செயலாக இப்படி எல்லாம் ஒட்டு மொத்தமாக எம்மை நோக்கிய அம்புகளை மீண்டும் எறிகிறார்கள்.
இதனுடன் இணைந்து ஆளுந்தரப்போடு ஐக்கிய தேசிய கட்சியினர் டீல் வைத்து யானையில் களமிறக்கப்பட்டுள்ளது .
தொல் பொருள் என்கின்ற போர்வையில் அம்பாறை தொடக்கம் திருகோணமலை வரை காணிகளை அபகரிக்க முற்படுகிறார்கள் அம்பாறையில் 43வீதம்,திருகோணமலை 44வீதம் ,மட்டக்களப்பு 25 வீதம் என முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் ஒட்டு மொத்தமாக கிழக்கில் நூற்றுக்கு 85 வீதமான சிறுபான்மை இன மக்கள் வாழ்ந்து வருகிற நிலையில் தொல் பொருள் என்கின்ற போர்வையில் 11பேர் கொண்ட குழுவினை அமைத்து அதில் எந்த வித சிறுபான்மையுமல்லாமல் செயற்படுவதும் ஒரு வகை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றார்.