புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு சலுகை

www.paewai.com
By -
0

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் கால அளவை 15 நிமிடங்கள் நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, 45 நிமிடங்கள் வழங்கப்படும் முதல் வினாத்தாளின் கால அவகாசம் ஒரு மணி நேரமாக நீடிக்கப்படும்.

கல்வி அமைச்சில் இன்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையானது ஒக்டோபர் 11 ஆம் திகதி நடைபெற உள்ளது.

4 மாதங்களுக்கும் மேலாக பாடசாலைகளை நடத்த முடியாமல் போனதால் புலமைப் பரிசில் பரீட்சையினை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இரண்டாவது வினாத்தாளில் உள்ள 4 விருப்பங்களை இந்த முறை 3 விருப்பங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)