சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை

www.paewai.com
By -
0

சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்காக செலுத்தப்படும் வட்டி வீதத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அறிவித்துள்ளது.

நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்காக அர்ப்பணித்த சிரேஷ்ட பிரஜைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்குடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வட்டி வீதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்காக வழங்கப்பட்டுள்ள விசேட வட்டி வீதம் 8மூஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், வட்டி வீதத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வருமான வரி சலுகை நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து வெளியாகி  வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்பதோடு, ஆதாரமற்றவை எனவும், நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)