MCC மீளாய்விற்கு மேலும் 2 வார கால அவகாசம்

www.paewai.com
By -
0

MCC ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சரவையின் பரிந்துரைகள் முன்வைக்கப்படுவது தொடர்பில் இன்று (09) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

சில அமைச்சர்கள் தமது கருத்துகளை எழுத்துமூலம் முன்வைத்துள்ளதோடு தானும் தனது தனிப்பட்ட விமர்சனத்தை அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளதாக பந்துல குணவர்தன கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் ஆராய்வு செய்ய வேண்டும் என சிலர் கூறுகின்றதாகவும் இந்த அறிக்கை குறித்த மீளாய்விற்கு மேலும் 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை இணைப் ​பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது தௌிவுபடுத்தினார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)