கொரோனா காரணமாக இலங்கையில் 12வது மரணம் பதிவானது!

Rihmy Hakeem
By -
0

இலங்கையில் கொரோனா தொற்று பாதிப்பினால் 12வது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 கடந்த 20 ஆம் திகதி இந்தியாவில் இருந்து வருகை தந்த பெண் ஒருவர் கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதே (23) அதிகாலை மரணமடைந்துள்ளார். 

அவருக்கு ஏற்கனவே புற்றுநோயாலும் பாதிக்ப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் குறித்த பெண் பறகஹதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதனால் மரணமடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)