இங்கிலாந்துக்கு எதிராக 156 ஓட்டம் அடித்து சாதனை படைத்தார் ஷான் மசூத்

www.paewai.com
By -
0

இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் ஷான் மசூத் தொடர்ச்சியாக மூன்று சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

தொடக்க ஆட்டவீரர் ஷான் மசூத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 319 பந்தில் 156 ஓட்டங்கள் விளாசினார்.

இந்த சதம் மூலம் தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து சாதனைப் படைத்தார். இதன்மூலம் ஜாகீர் அப்பாஸ், மடாஸ்சர் நாசர், முகமது யூசுப், யூனிஸ் கான், மிஸ்பா-உல-ஹக் ஆகியோர் சாதனையுடன் இணைந்துள்ளார். இவர்கள் ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்து சாதனைப் படைத்தவர்கள்.

ஷான் மசூத் இலங்கைக்கு எதிராக கராச்சியில் 135 ஓட்டங்களும், பங்காளதேசத்திற்கு எதிராக ராவல்பிண்டியில் 100 ஓட்டங்களும் அடித்திருந்தார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)