திருமண வயதை 18 ஆக நிர்ணயிப்பதற்கான தனி நபர் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது

Rihmy Hakeem
By -
0


 9 ஆவது பாராளுமன்றத்தில் முதலாவது தனிநபர் பிரேரணையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் சமர்ப்பித்துள்ளார்.

இந்த பிரேரணையை நேற்று (26) பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசாநாயக்கவிடம் கையளித்தாக பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

திருமணம் முடிப்பதற்கான வயதெல்லை 18 ஆக நிர்ணயிப்பது இந்த பிரேரணையின் நோக்கம் என அவர் கூறினார்.

எந்த இனமானாலும் எல்லோருக்கும் பொதுவான சட்டம் என்ற வகையில் இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சட்டத்தை வெகுவிரைவில் அமுல்படுத்துவதற்கான அவசியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Adaderana 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)