உலகளவில் ஐ.பி.எல். போட்டிகளுக்கு மிகப்பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. அதன்காரணமாக, அந்தப் போட்டிகளின்போது விளம்பரம் செய்வதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் பல ஆர்வம் காட்டிவந்தன.
கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான டைட்டில் ஸ்பான்சரை 2,200 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் VIVO நிறுவனம் கைப்பற்றியிருந்தது.
லடாக் எல்லை மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் மரணம் அடைந்த விவகாரத்தில், இருநாட்டு உறவில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதை தொடர்ந்து ஐ.பி.எல் 2020 டைட்டில் ஸ்பான்சரிலிருந்து விலகுவதாக சீனாவின் VIVO நிறுவனம் அறிவித்தது. அதனையடுத்து, டைட்டில் ஸ்பான்சராக எந்த நிறுவனம் வரும் என்ற கேள்வி எழுந்துவந்தது.
இந்தநிலையில் பி.சி.சி.ஐ நடத்திய ஏலத்தில் ஐ.பி.எல். டைட்டில் ஸ்பான்சரை ட்ரீம் லெவன் 222 கோடி ரூபாய்க்கு வென்றுள்ளது. TATA நிறுவனம் 180 கோடி ரூபாய்க்கும், பைஜூஸ் நிறுவனம் 125 கோடி ரூபாய்க்கும் ஏலம் குறிப்பிட்டிருந்தனர்.