இம்முறை 48.79 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை

Rihmy Hakeem
By -
0


 பொதுத் தேர்தலில் வாக்களிக்க தகுதிப்பெற்ற 48,79,163 பேர் வாக்களிக்கவில்லை என்பதுடன், வாக்களிக்க தகுதிபெற்றிருந்த 1,62,63,874 பேரில் 1,13,84,711 பேர் மாத்திரமே தமது வாக்கை பயன்படுத்தியுள்ளனர்.  

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 1,59,92,096 வாக்களிக்க தகுதிப்பெற்றிருந்தனர். இதில் 1,33,87,951 பேர் தமது வாக்களித்திருந்தனர். 26 இலட்சம் வரையிலானோர் வாக்களித்திருக்கவில்லை. ஆனால், இம்முறை பொதுத் தேர்தலில் 48 இலட்சம் பேர்வரை வாக்களித்திருக்வில்லை.

கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக இவ்வாறு பாரிய தொகையினர் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு வராதிருந்திருக்கலாம் என அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.   சுப்பிரமணியம் நிஷாந்தன் 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)