இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
இதன்படி தொடர்ந்து இரண்டு நாட்கள் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி இறுதியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 583 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை நிறுத்திக் கொண்டது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிராவ்லி 267 ஓட்டங்களையும், பட்லர் 152 ஓட்டங்களையும் விளாசியிருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி, அலாம், யாசிர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்படி தமது முதலாம் இன்னிங்சை ஆடி வருகின்ற பாகிஸ்தான் அணி இன்றை மூன்றாம் நாள் ஆட்டத்தில் சற்று நேரத்துக்கு முன்பு 9 விக்கட்டுகளை இழந்து 261 ஓட்டங்களை பெற்று ஆடி வருகின்றது. பாக். அணி சார்பில் அசார் அலி ஆட்டமிழக்காமல் 129 ஓட்டங்களை பெற்று ஆடி வருகின்றார்.
பந்து வீச்சில் அன்டர்ஷன் 4 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார்.