நாட்டு மக்கள் உணவுக்காக கஷ்டப்படுகிறார்கள் : ஆட்சியாளர்களோ ஒன்று, இரண்டு, மூன்றிலிரண்டு என்று கேட்டு திரிகிறார்கள் - விஜயமுனி சொய்ஸா

Rihmy Hakeem
By -

ஒன்று, இரண்டு, மூன்றில் இரண்டு என்று மக்களிடம் கேட்கிறார்கள். நாட்டு மக்கள் பசிக்கு உண்பதற்கு கூட கஷ்டப்படுகிறார்கள் என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான காமினி விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்தார். 

அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில், 
நான் சிறுவயதில் கூட மாங்காய் பறிப்பதென்றால் கூட பெரிய மரமொன்றிற்கே கல் எறிவேன். இலங்கையில் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டம் கம்பஹா மாவட்டமாகும். ராஜபக்சர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கு உகந்த இடம் இதுதான் என்றும் தெரிவித்தார்.